‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி

0
183

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர்ம் உயிரிழந்தனர். அவர்களுக்கு படக்குழு தரப்பிலிருந்து நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என மொத்தம் 4 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பேட்டியின்போது பேசிய கமல்ஹாசன், எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உதவி செய்துள்ளோம். வரும் முன் காப்பது அவசியம். இனி வராமல் தடுக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்திலும் இது நடைபெற்று வருகிறது என்றார்.

ஷங்கர் பேசும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த அனுதாபங்களை தெரித்துக்கொள்கிறேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளித்தார்.