ஆகஸ்ட் 1 முதல் 14 சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

0
128

ஆகஸ்ட் 1 முதல் 14 சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 14 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் ஒன்று முதல், வகுப்புவாரியாக 14 தொலைக்காட்சி சேனல்களில் பாடங்கள் ஒளிபரப்படும் என்றார்.

தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் விரைவில் சீரமைக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.