அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றினார் மு.க ஸ்டாலின்

0
372

அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றினார் மு.க ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் முகக்கவசம் அணிந்த படி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் முகக்கவசம் அணிந்த படி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர், தேசிய கொடி ஏற்றிய பிறகு கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பறிமாறிக்கொண்டனர்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவது இதுவே முதல்முறையாகும்.