இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 58.25 கோடி

0
2

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 58.25 கோடி

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 58.52 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,25,49,595 முகாம்களில் 64,69,222 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,16,80,626 பேர் கொவிட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.63 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 160 நாட்களில் இது மிகவும் குறைவு.

தொடர்ந்து 57 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,33,924 ஆக உள்ளது. இது 155 நாட்களில் மிகவும் குறைவு. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.03 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 12,95,160 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,75,51,399 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 1.91 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.94 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 28 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 77 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.