69வது பிறந்த நாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி

0
144

69வது பிறந்த நாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனது பிறந்த நாளை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எளிமையாக கொண்டாடுங்கள் என்று அவர் கேட்டு கொண்டார்.

அதைத்தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
செலுத்தினார்.