500 ரூபாய் அறிவிப்பு; ஏசி அறையில் இருப்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியாது – பியூஷ் கோயல்

0
297

500 ரூபாய் அறிவிப்பு; ஏசி அறையில் இருப்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியாது – பியூஷ் கோயல்

பிப்ரவரி 01, 2019, மத்திய அரசு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 கொடுக்கும் வகையில் திட்டம் கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 17 ரூபாய் என அறிவித்துள்ளது அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் “5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சியின் திறமையின்மையாலும், ஆணவத்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும் செயல்,” என கூறியுள்ளார். 4.5 வருடங்கள் சும்மா இருந்த அரசு இப்போது தேர்தல் வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுகிறது என விமர்சனம் செய்கிறது.

இந்நிலையில் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியாது என ராகுல்காந்தியை பியூஷ் கோயல் விமர்சனம் செய்துள்ளார். வருடத்திற்கு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறிய விவசாயிகள் இதுபோன்ற அரசு உதவியை இதற்கு முன்னதாக பெறவில்லை. வம்சாவளிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏசி அறையில் வாழ்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியாது என விமர்சனம் செய்துள்ளார்.