5 ஆண்டுகளில் 290 கோடி கி.மீ. பயணித்து வியாழனின் காந்தபுலத்துக்குள் நுழைந்தது ஜூனோ விண்கலம்: நாசா விஞ்ஞானிகள் சாதனை

0

நாசா, ஜூலை 2–அமெரிக்காவின் நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகால பயணத்துக்கு பின், வியாழன் கிரகத்தின் காந்தபுலத் துக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுநாள் அந்த கிரகத்தின் வட்டப் பாதையில் விண்கலம் வெற்றி கரமாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ விண் கலத்தை தயாரித்தனர். இந்த விண்கலம் புளோரிடா மாகாணத் தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி மையத்தில் இருந்து 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தை கடந்த இந்த விண்கலம் அண்மையில் வியாழன் கிரகத்தை நெருங்கியது.
இந்நிலையில் அந்த கிரகத்தின் காந்தபுலத்துக்குள் ஜூனோ விண் கலம் வெற்றிகரமாக நுழைந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் வியா ழன் கிரகத்தின் வட்டப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு, அதன் மேற்பரப்பு மற்றும் உள் பரப்பை ஆராயும் பணிகள் தொடங் கப்படும் என்றும்
தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வியாழன் கிரக ஆய்வாளர் ஸ்காட் பால்டன் வெளியிட்ட அறிக்கையில், ‘வியாழன் கிரகத்தின் எல்லைப் பகுதியை வெற்றிகரமாக கடந்து விட்டோம். அந்த கிரகத்துக்குள் விண்கலம் வேகமாக நுழைந்து வருகிறது’ என குறிப்பிடப் பட்டுள்ளது.