48ம் ஆண்டு நினைவுநாள்: திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் – தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை!

0
77

48ம் ஆண்டு நினைவுநாள்: திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் – தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை!

தந்தை பெரியாரின் 48 வது நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.