4 தொகுதியில் இடைத்தேர்தல் – கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்

0

4 தொகுதியில் இடைத்தேர்தல் – கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.

அதற்கு முன்னதாகவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கும் விவரங்கள் அடங்கிய பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 3, 4, 14-ந்தேதி ஓட்டப்பிடாரத்திலும், 5, 6, 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 10, 11, 17-ந்தேதி சூலூரிலும், 12, 13, 16-ந்தேதி அரவக்குறிச்சியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளுக்கு கமல்ஹாசன் வாக்குகளை திரட்ட உள்ளார்.

‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே, கமல்ஹாசனின் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #TNAssemblyElection #KamalHassan