‘‘3,230 நவீன சொகுசு ரெயில் பெட்டிகள் தயாரிப்பது நடப்பு ஆண்டின் இலக்கு’’

0
244

‘‘3,230 நவீன சொகுசு ரெயில் பெட்டிகள் தயாரிப்பது நடப்பு ஆண்டின் இலக்கு’’

நவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிடப்பட்டுள்ளதாக ஐ.சி.எப். முதன்மை தலைமை மின்னியல் பொறியாளர் என்.கே.குப்தா தெரிவித்தார்.

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்) நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் என்ஜினியர் என்.கே.குப்தா கொடி ஏற்றிவைத்தார். தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கியான் சந்திரா தலைமையிலான ரெயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

ஐ.சி.எப். சார்பில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை 2 ஆயிரத்து 340 ரெயில் பெட்டிகளை தயாரித்து உள்ளது. இந்த ஆண்டு (2019) சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்ட புறநகர் ரெயில்பெட்டிகள், நீலகிரி மலை ரெயில் பெட்டிகள், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட புறநகர் ரெயில்பெட்டிகள், டீசல் புறநகர் ரெயில் பெட்டிகள், நவீன சொகுசு ரெயில் பெட்டிகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 230-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரெயிலான “ரெயில்-18′ சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயங்கி சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற தொழில் நுட்பம் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் கொண்ட நெடுந்தொலைவு புறநகர் ரெயில்பெட்டிகள், தானியங்கி ஆய்வு ரெயில் பெட்டி, மும்பை புறநகர் ரெயில் சேவைக்கான குளிர்வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள் போன்ற அதி நவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, நவீன பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று முதன்மை தலைமை மின்னியல் பொறியாளர் என்.கே.குப்தா தெரிவித்தார்.

விழாவில் ஐ.சி.எப். அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.