2019-20ல் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி- பட்ஜெட்டில் தகவல்

0
164

2019-20ல் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி- பட்ஜெட்டில் தகவல்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சென்னை: தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ.43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.

* பிற்படுத்தப்பட்டோர் நலன் பள்ளிக்கல்விக்காக ரூ.290.71 கோடி ஒதுக்கீடு

* ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடியும், ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடியும், ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்காக ரூ 40 கோடி ஒதுக்கீடு

* ஆதி திராவிட மாணவர்களின் உயர்கல்வி உதவி தொகைக்காக ரூ.1857.13 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* பிற்படுத்தப்பட்ட விடுதி மாணவர்களுக்காக உணவு செலவுகளுக்காக 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

* மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு ரூ.7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது.

* முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், ரூ.11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த நிதியாண்டை விட ரூ.2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.7262.33 கோடி வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* முத்திரைத்தாள் கட்டணங்கள் மூலம் வருவாய் எதிர்பார்ப்பு ரூ 11,512 கோடி

* சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவு கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் .

* மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது

* சிறுபான்மையினர் நலனுக்காக 14.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* 2019-20ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச்சுமை, உதய் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை தொடரும்.

* மின் மானியம் உணவு மானியம், சமூக நலத்திட்டங்களின் கீழ் வரும் ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்கள் தொடரும்.

* தமிழக அரசின் மொத்த கடன் இந்த நிதியாண்டில் ரூ.3,97,495.96 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த வருவாய் செலவீனங்கள் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும் இதனால் வருவாய் வருவாய் பற்றாக்குறை ரூ.14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* மாநில அரசின் மொத்த கடன் வரம்பு அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்கு உள்ளாகவே இருக்கும்.

* மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளது.

* தமிழ்நாடு இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து விளையாட்டுகள் மேம்படுத்தப்படும்.

* மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.7262.33 கோடி வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ 7262.33 கோடி வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* நிதி ஆதாரங்களை பெருக்க திறன்மிக்க வரி மேலாண்மை அவசியம்.

* மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

* மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும்.

* வணிக வருவாய் 2019-20ல் 96177.14 கோடியாக இருக்கும் என கணிக்கிறோம்.

* 2019-20 ல் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ 10,950 கோடியாக இருக்கும்.

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து விளையாட்டுகள் மேம்படுத்தப்படும்.

* குழந்தைகள் மேம்பாடு திட்டத்துக்கு 2052.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக 138.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்ட விடுதி மாணவர்களுக்காக உணவு செலவுகளுக்காக 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழக்கும் திட்டத்துக்காக ரூ.7.48 கோடி ஒதுக்கீடு

* மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.7262.33 கோடி வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* முத்திரைத்தாள் கட்டணங்கள் மூலம் வருவாய் எதிர்பார்ப்பு ரூ 11,512 கோடி.

* தமிழக அரசின் மொத்த கடன் இந்த நிதியாண்டில் ரூ.3,97,495.96 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* மாநில அரசின் மொத்த கடன் வரம்பு அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்கு உள்ளாகவே இருக்கும்.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

நிறைவுசெய்த பின் எத்தனை தடைகள் வந்தாலும், தாக்குதல்கள் வந்தாலும், அத்தனை விமர்சனங்களையும் எதிர்கொண்டு மக்கள் நலப் பணிகளை தொடருவோம் எனக்கூறினார்.