104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் – சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி

0

104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் – சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பகுடியில் 104 வயது கணவன் இறந்த துக்கத்தில் 100 வயது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு வயதை கடந்தும் இணைபிரியாமல் வாழ்ந்து இறந்த முதியவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்த 104 வயது முதியவர் வெற்றிவேல். இவருடைய மனைவி 100 வயதுடைய பிச்சாயி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் 23 பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேரன்களும் பேத்திகளும் உள்ளனர். 104 வயதான வெற்றிவேல் நீண்ட காலமாக விவசாயம் செய்து குடும்பத்தை காத்து வந்தார்.

நூறு வயதை கடந்தும் வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத ஜோடியை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 100 வயதை கடந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்து, இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.