”100 நாள் ஆட்சி; மக்கள் மகிழ்ச்சி” – கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

0
27

”100 நாள் ஆட்சி; மக்கள் மகிழ்ச்சி” – கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, கருணாநிதியின் நினைவிடம் பல்வேறு வகையான காய்கறிகளாலும் மலர்களாலும் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

அதில் ‘ 100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வந்து மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.