‘100% காதல்’ திரை விமர்சனம்

0

‘100% காதல்’ திரை விமர்சனம்

படிப்பு உட்பட எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நாயகன் பாலுமகேந்திரா (ஜி.வி.பிரகாஷ்). இதனால் நம்பர் 1 என்பது இவருக்கு ஒரு போதை போலவே ஆகிவிடுகிறது. கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகள் மகாலட்சுமி (ஷாலினி பாண்டே) ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்கு வருகிறார். அங்கேயே தங்கி படிக்கிறார். இருவரும் ஒருவர் ஒருவரை விரும்புவது வெளிகாட்டாமல் ஒரே வகுப்பில் படித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷை மிஞ்சி படிப்பில் முதல் இடைத்தை பிடிக்கிறார் ஷாலினி பாண்டே! இதனால் ஜி.வி.பிரகாஷ{க்கு பெரும் ஈகோ உருவாகி விடுகிறது. இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் யுவன் மயில்சாமி படிப்பில் முதல் இடத்தை பிடித்து இருவரையும் பின்னுக்கு தள்ளுவதோடு, ஜீ.வி. பிரகாஷ் மிகவும் விரும்பும் ஷாலினி பாண்டே மனதிலும் இடம் பிடித்து விடுகிறார் யுவன் மயில்சாமி!. இந்நிலையில் முக்கியமான தேர்வில் யுவன் மயில்சாமி! முதல் மாணவனாக வரக்கூடாது என்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள். ஷாலினி பாண்டே அந்த மாணவனை வீழ்த்த காதலிப்பதாக நடிக்கிறார். இதன் இடையே ஜி.வி.பிரகாஷ{க்கும் ஷாலினி பாண்டேவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் படிப்பில் முதலிடம் பிடித்தாரா? ஷாலினி பாண்டே யாருடன் ஜோடி சேர்ந்தார்? என்பதே 100% காதல் படத்தின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டேவுக்கும் இடையிலான சில ரொமான்ஸ் காட்சிகள் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது!

ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை வசீகரிக்கிறார்.

நாசர், ரேகா, தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், ஷிவானி பட்டேல், ஜெயசித்ரா, மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ், தம்பிராமையா என படத்தில் குணச்சித்திர நடிகர்கள் நிறையப்பேர் இருந்தார்கள் அவ்வளவுதான். கொடுத்த வேலையை செய்தார்களா என்பதே ஒரே கேள்வி? காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.

ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு காதல் கதைக்குத் தேவையான அளவு நேர்த்தியா இளமையோடு உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஈர்க்கவில்லை.

151 நிமிடங்கள் எப்போ கடந்து போகும் என்று உணர்வு ஏற்படுகிறது. நிறைய காட்சிகள் திரும்ப திரும்ப வருவது போல் உள்ளது. எடிட்டர் காசி விஸ்வநாதன் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்ஆன 100% லவ் என்ற பெயரில் 2011ல் வெளியானது. அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். திரைக்கதை செயற்கைதன்மையுடன் உள்ளது இயக்குனர் சந்திரமௌலி நிறைய கவனம் செலுத்தி இருக்கவேண்டும் ஜீ.வி.பிரகாஷ் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகள் கதைக்கு தேவையா? இயக்குனருக்குதான் வெளிச்சம்.

மொத்தத்த்pல் ”100மூ காதல்” ”50% காதல்” 50% சொதப்பல்!

நம்ம பார்வையில் கிரியேடிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜெ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுகுமார் மற்றும் புவனா சந்திரமௌலி தயாரித்திருக்கும் ‘100% காதல்’ படத்துக்கு 2 ஸ்டார் தரலாம்.