10 – 11 – 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? – முழு கால அட்டவணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. விபரம் இதோ!

0
144

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? – முழு கால அட்டவணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. விபரம் இதோ!

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. எனினும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது நடைபெறும் 2022 – 2023-ம் ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

அதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் சமூக அறிவியல் வரையிலான பாடத்திற்கான தேர்வு தேதி, இதோ :-

11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-


12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-