ருமேனியாவில் இருந்து இந்தியர்களை அழைத்துவர முதல் விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டது

0
113
கோப்புப் படம்
கோப்புப் படம்

ருமேனியாவில் இருந்து இந்தியர்களை அழைத்துவர முதல் விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டது

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.

இதற்கிடையே, உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது.

உக்ரைனில் போர் உச்சமடைந்துள்ள நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படுகிறது என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.