மே.வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி முகம்: கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

0
13

மே.வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி முகம்: கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

சிவசேனாவின் சஞ்சய் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், “தானும் மம்தாவும் இருக்கும் படத்தை வெளியிட்டு தீதி வாருங்கள் வாருங்கள் தீதி என்று பதிவிட்டு வங்காள பெண் புலியே” என்று பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டபேரவை தேர்தல் முடிவுகள் மம்தா பானர்ஜி தலைமை திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளன. இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடைசி நிலவரப்படி திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 206 தொகுதிகளில் முன்னிலை வகிக்க பாஜக 83 இடங்களில் மட்டுமே முன்னிலை என்று சரிவு கண்டுள்ளது.

வாக்குச் சதவீதங்கள்படி பார்த்தால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 49% வாக்குகள் கிடைத்துள்ளன, பாஜகவுக்கு லோக்சபா தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதத்தை விட குறைவாகக் கிடைத்துள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பாஜக மதரீதியாக பிளவுப்படுத்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்து தனது தகவல் தொழில்நுட்ப பிரிவை வைத்து என்னென்னமோ வேலைகள் காட்டினாலும் கடைசியில் தீதியின் தீப்பொறி பறக்கும் பிரச்சாரமே இந்த முறை பாஜகவின் விஷமப்பிரச்சாரத்துக்கு ஆப்பு வைத்துள்ளதாக திரிணாமூல் தலைவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு சிவசேனா ஆம் ஆத்மி, உமர் அப்துல்லா ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

சிவசேனாவின் சஞ்சய் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், “தானும் மம்தாவும் இருக்கும் படத்தை வெளியிட்டு தீதி வாருங்கள் வாருங்கள் தீதி என்று பதிவிட்டு வங்காள பெண் புலியே” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், மிகப்பெரிய வெற்றிக்காக மம்தா பானர்ஜி தீதிக்கு வாழ்த்துக்கள்! என்ன ஒரு போராட்டம். மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துக்கள்.

காஷ்மீர் அரசியல்வாதி உமர் அப்துல்லா தன் ட்விட்டர் பக்கத்தில், “மம்தா தீதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேற்கு வங்கத்தில் உள்ள அனைவருக்கும் இந்த அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள். பாஜகவும் பாரபட்ச தேர்தல் ஆணையமும் உங்கள் மீது எதை எறியவில்லை, அனைத்தையும் எறிந்தார்கள், ஆனால் நீங்கள் நின்றீர்கள் வென்றீர்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.