‘பெரியார்.. மு.க.ஸ்டாலின்’ வேடமிட்டு சங்கிகளை சம்பவம் செய்த குழந்தைகளை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

0
93

‘பெரியார்.. மு.க.ஸ்டாலின்’ வேடமிட்டு சங்கிகளை சம்பவம் செய்த குழந்தைகளை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில், தந்தை பெரியார் கெட்டப்பில் சிறுவர்கள் ஃபர்மாமென்ஸ் செய்து நடித்துக் காட்டினர்.

அப்போது பெரியார் கருத்தை நாடக வடிவிக் கையில் எடுத்திருந்த சிறுவர்கள், பெண் விடுதலை, பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? மததத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சகளில் பதியும் வண்ணமாக அமைந்திருந்தது.

குறிப்பாக, பெரியாரின் வேடமணிந்திருந்த சிறுவன், “கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமா நடத்தனும்ங்கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்”போன்ற வசனங்களையும், பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசியிருந்தனர்.

முன்னதாக புலிகேசி என்ற தலைப்பில் நடத்திய நாடகத்தில், பிரதமரை விமர்சித்து விட்டதாகக் கூறி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அந்த தனியார் தொலைக்காட்சிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தை பூதாகரமாக்கிய பா.ஜ.க கும்பல், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறையிடம் புகார் அளித்து தொலைக்காட்சிக்கு நோட்டீஸூம் அனுப்பப்பட்டது.

இதனிடையே சமூக நீதி காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்து நிகழ்ச்சி தயாரித்துள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது சிறுவர்கள் தங்கள் கதாபாத்திரை மீண்டும் முதல்வர் முன்பு நடித்து காட்டி, திருவள்ளுவர் சிலையையும் பரிசாக பெற்றார். முதல்வரின் இந்த நெகிழ்ச்சி சந்திப்பு தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.