பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்வீரர்கள் சங்கம் வேண்டுகோள்

0
87

பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்வீரர்கள் சங்கம் வேண்டுகோள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘25-க்கும் குறைவான முதல் தர போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் வீரர்களின் மனைவிக்கு பென்சன் கொடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடைகாலம் முடிந்து விட்டதால் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகருக்கு நலநிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி வருகிறோம். சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பதவியேற்று 10 மாதங்கள் நெருங்குகிறது. ஆனால் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் வீரர்களில் 70 வயதை கடந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இதற்காக என்றென்றும் காத்துக் கொண்டு இருக்க முடியாது. முன்னாள் வீரர்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட குழுவில் 3 முன்னாள் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் வீரர்களின் அவலநிலையை உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். 4 முறை உயர்மட்ட குழு கூட்டம் நடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீரர்களுக்கு நலதிதி திரட்டியதை தவிர கடந்த 10 மாதங்களில் நாங்கள் எதுவும் செய்துவிடவில்லை’ என்று தெரிவித்தார்.