தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்: புதிதாக 1,000 பேருந்துகள் வாங்க ரூ.623.5 கோடி

0
9

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்: புதிதாக 1,000 பேருந்துகள் வாங்க ரூ.623.5 கோடி

பட்ஜெட்டில் அரசுப் போக்குவரத்துத் துறை, மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

* மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு.

* அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க மானியமாக ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு.

* போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* புதிதாக 1,000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு

* மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயான சேவை 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும்

* மெட்ரோ 2-ஆம் கட்ட பணிகள் 2026ல் முடிக்கப்படும்.

* விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ பணி விரைவில் தொடங்கும்.

* 10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் அதிகரித்துவரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.

* புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.