தமிழக சட்டசபை தேர்தல் 2021: மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?- கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு

0
7

தமிழக சட்டசபை தேர்தல் 2021: மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?- கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு

கமலுடன் நெருங்கிய நட்புடன் இருந்த நடிகை கவுதமி, கமல்ஹாசனுடனான நட்பை முறித்து கொண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் கவுதமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கே சில மாங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில், அந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. கவுதமி இந்த தேர்தலில் போட்டியிவில்லை.

இந்தநிலையில், சென்னையில் செய்திளாளர்களை சந்தித்த கவுதமி, “கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம். பாஜக தலைவர்களான வாஜ்பாய், நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாஜகவில் இணைந்தேன்.

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறது. அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்கு பிறகு தெரியும்.

புதிய கட்சி தொடங்கும் போது ஒவ்வொருவரும் இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் திமுக கூட்டணியின் வாக்குகள் பிரியுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படி பிரிந்தால் அது அதிமுக-பாஜக கூட்டணிக்குதான் சாதகமாக அமையும்.” என்று கூறினார்.