தன்னம்பிக்கை எதிரொலிக்கும் நரிக்குறவ இன மாணவியின் பேச்சு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

0
49

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் நரிக்குறவ இன மாணவியின் பேச்சு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகிய மாணவிகள் தங்கள் கல்விக்கு உதவி வேண்டிய பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசி இருப்பார்கள். எங்க அப்பா வேட்டைக்கு செல்கிறார். அதுதான் அவர் காலம் காலமாக செய்யும் தொழில். அதை வைத்துதான் நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று கூறியிருப்பார்.

மேலும் பள்ளி வகுப்பறையில் மாணவிகள் சிலர் நரிக்குற இனத்தை சேர்ந்தவர் என்பதால் பழகுவதற்கு தயங்கினார்கள். சிலர் என்னை ஒதுக்கியும் வைப்பார்கள். ஆனால் தற்போது சிலர் என்னுடன் அன்பாக பேசி வருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. கஷ்டங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். இப்போது அடிபட்டால்தான் வாழ்க்கை. காயத்தோடு ஓட வேண்டும் என்று அந்த மாணவிகள் குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் பலரது பாராட்களை பெற்று தந்தது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 மாணவிகளையும் நேரில் அழைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனிருந்தார். அப்போது மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். தங்களது குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நீங்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர்.

. நீங்கள் எங்களுக்கு அப்பா மாதிரிதான். உதவி கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர். இதை கேட்ட முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல! நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்! என்றுள்ளார்.