செப்டம்பரில் மீண்டும் களத்தில் குதிக்கிறார் மைக் டைசன்

0
114

செப்டம்பரில் மீண்டும் களத்தில் குதிக்கிறார் மைக் டைசன்

செப்டம்பர் 12-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மையத்தில் எட்டு சுற்றுகள் கொண்ட காட்சி ஆட்டத்தில் வரும் செப்டம்பரில் மீண்டும் களத்தில் குதிக்கவுள்ளார் மைக் டைசன்.

1985 முதல் 2005 வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக இருந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். எதிராளியை நாக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்றவர். இவரைத் தெரியாத விளையாட்டு ரசிகர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்குப் புகழ்பெற்றுள்ள மைக் டைசன் சமீபத்தில் ஒரு இன்ஸ்டகிராம் பதிவின் மூலம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் வெளியிட்ட விடியோவில் மீண்டும் கடுமையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றன. புத்திசாலித்தனமாகப் பயிற்சி எடுங்கள் என்று சொன்ன டைசன், விடியோ முடிவில் நான் திரும்ப வருவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

58 தொழில்முறை ஆட்டங்களில் 50-ல் வெற்றியை ருசித்தவர் டைசன். 2005-ல் ஓய்வுக்கு முன்பு கெவின் மெக்பிரைட்டுடன் தோற்றுப் போனார்.

இந்நிலையில் 54 வயதில் மீண்டும் களத்தில் குதிக்கவுள்ளார் மைக் டைசன். செப்டம்பர் 12-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மையத்தில் எட்டு சுற்றுகள் கொண்ட காட்சி ஆட்டத்தில் ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் மோதவுள்ளதாகக் கூறியுள்ளார்.

51 வயது ராய் ஜோன்ஸ் ஜூனியர் கடைசியாக 2018-ல் போட்டியிட்டுள்ளார்.

மைக் டைசனின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.