கொரோனா: பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

0
19

கொரோனா: பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒராண்டு வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவிதத்தினர் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20ம் தேதி 438 ஆக இருந்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு, 27ம் தேதி 486 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளை விரைவுபடுத்தவும், மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.