உக்ரைன் மீது ரஷியா வான்வழி – சைபர் இரட்டை தாக்குதல்; 100க்கும் மேற்பட்டோர் பலி

0
108

உக்ரைன் மீது ரஷியா வான்வழி – சைபர் இரட்டை தாக்குதல்; 100க்கும் மேற்பட்டோர் பலி

லண்டன்: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன.உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

ரஷியா – உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனில் கீவ் விமான நிலையத்தில் ரஷியா போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பதிலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷிய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷிய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா, சைபர் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. உக்ரைன் அரசின் முக்கிய இணையதங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவின் சைபர் தாக்குதலில், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கமப்பட்டு உள்ளது.

உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதங்களில் தகவல் அழிப்பு டூல் மால்வேர் மூலம் ரஷியா சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது.