‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ கொரோனா விழிப்புணர்வு பாடல்

0

‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ கொரோனா விழிப்புணர்வு பாடல்

நம்முயிரை காக்கும் நோக்கில் தம்முயிரை துச்சமாக மதித்து, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சியினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’

என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, ஒரு இன்னிசைப் பாடலை, இசையமைப்பாளர் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படக்குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் சங்கர் தனது கருத்தாக்கத்தில், வைரபாரதியின் பாடல் வரிகளுக்கு இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். ராம் செழியன் இப்பாடலுக்கான காட்சி அமைப்புகளோடு படத்தொகுப்பையும் சேர்த்து கவனிக்க, அதனை கவிதா சங்கர் பாடியிருக்கிறார். இதற்கு உதவியாக இருந்த இயக்குனர் தயானந்தனுக்கு ‘சாதகப் பறவைகள்’ சங்கர் இத்தருணத்தில் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறார்.