வைரமுத்துவின் வரிகளில் எஸ்பிபி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்…!

0

வைரமுத்துவின் வரிகளில் எஸ்பிபி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்…!

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
21 நாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அத்தியாவசிய சேவையைத் தவிர மற்ற துறை வேலைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்த படியே சில சுவாரஸ்யமான விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வகையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா குறித்த பாடலொன்றை பாடியிருக்கிறார். அணுவை விடவும் சிறியது அணுகுண்டை விடவும் கொடியது எனத் துவங்கும் அப்பாடலுக்கு அவரே மெட்டும் அமைத்து இருக்கிறார்.  தொடுதல் வேண்டாம் தனிமை கொள்வோம். தூய்மை என்பதை மதமாய் செய்வோம்., என நீளும் வைரமுத்துவின் அப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அழகாக வந்துள்ளது.

தமிழில் வைரமுத்துவைப் போலவே தெலுங்கில் வெண்ணிலகண்டி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் காய்கனி ஆகியோர் கொரோனா குறித்து எழுதிய பாடலையும் அந்தந்த மொழியிலேயே பாடி பதிவேற்றம் செய்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

CORONA IN TAMIL

LYRICS BY SRI. VAIRAMUTHU, COMPOSED BY MYSELF

Gepostet von S. P. Balasubrahmanyam am Donnerstag, 26. März 2020