வைகுண்ட ஏகாதசி: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

0

வைகுண்ட ஏகாதசி: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 2.30 மணிக்கு தனுர்மாத பூஜை தொடங்கியது. 4 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று, சரியாக 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த காட்சியை பார்க்கவும், பெருமாளை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.