வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
90

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை

* வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

* 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.