வேர் தேடும் தமிழன் வேணுதன் மகேந்திரரட்ணம்

0

வேர் தேடும் தமிழன்

வேணுதன் மகேந்திரரட்ணம்

அடிப்படையில் வானொலி ஒலிபரப்பாளரான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும், செய்திக்கட்டுரைகளை எழுதுவதிலும் இயங்கிவருபவர். தற்போது கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் tvi தொலைக்காட்சியிலும், கனேடிய பல்கலாச்சார வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவிலும் கடமையாற்றிவருகிறார். இவர் எழுதி,தொகுத்து வழங்கும் ‘வேர்‘ நிகழ்ச்சி உலகத்தமிழர்களிடம் பிரபலமானது.

தமிழ்,தமிழர்மரபு சார்ந்த விடயங்களையும், வரலாற்றுத்தகவல்களையும் ஆவணமாக்குவதும் , அவற்றை இளம் தலைமுறையினருக்குக் கடத்துவதும் இவரது நிகழ்ச்சியின் தன்மை. தமிழின் தொன்மையையும் பெருமைகளையும் தமிழர்கள் அறியவேண்டும் என்பதோடு அவற்றை உலகத்தார் அறியச்செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி படைக்கப்படுகிறது.

வட அமெரிக்கக் கண்டத்தில் முதல் முழுநேர தமிழ் ஊடக நிறுவனமான CMR – TVI ஊடகக்குழுமம், உலகெங்கும் தமிழைச் சேர்க்கும் நோக்கோடு தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பணிகளில் வேர் நிகழ்ச்சியும் ஒன்றாகும். உலக நாடுகளில் பரந்துவாழும் தமிழர்கள் இனரீதியான மற்றும் மொழி ரீதியான செயற்பாடுகளில் மிகப்பெரும் உழைப்பையும் ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றனர். அவற்றிற்கு வேர் நிகழ்ச்சியும் ஒரு உதாரணம்.