விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

0

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

விழுப்புரம்: விழுப்புரம்- திண்டிவனம் சாலையில்  தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார். 62 வயதான ராஜேந்திரன் விழுப்புரம்  நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி இருந்தார்.  இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே எம்.பி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அளித்த விருந்தில் எம்.பி. ராஜேந்திரன்(62) கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.