விநாயகர் சதுர்த்தி: திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் விழா கோலாகலம்

0

திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை முதலே, உச்சிப் பிள்ளையார் கோயிலில் அமைந்துள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும் நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் திருச்சி உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க காலை முதலே ஆயிரக்கணக்கானோர் கோயிலில் குவிந்தனர். பல மணி நேரம் வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டனர்.

உச்சிப் பிள்ளையாருக்கு மிகப் பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.