விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்தது ஆட்டோ சின்னம் – சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால், ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. சுயேட்சை வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னம் கேட்குமாறு கூறியிருந்தார். இதனையடுத்து, மதுரை 88-வது மாநகராட்சி வார்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.