விக்னேஷ் சிவன் அனுப்பிய மீம் இதுதான் – பார்த்திபன் பதிவு

0

விக்னேஷ் சிவன் அனுப்பிய மீம் இதுதான் – பார்த்திபன் பதிவு

விக்னேஷ் சிவன் தனக்கு அனுப்பிய மீம் ஒன்றை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் நேரத்தைச் செலவிடும் திரைத்துறை பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும், தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் தங்களின் வாழ்க்கை முறையையும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க கொரோனாவை மையப்படுத்திய நகைச்சுவையான மீம்ஸ்களை உருவாக்கி தங்களது நாட்களை கடத்தி வருகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அதை சமூகவலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த நானும் ரவுடிதான் படக்காட்சி கொரோனா மீமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதை விக்னேஷ் சிவன் தனக்கு அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.