வாஸ்கோ ட காமா ஷிப் ட்ராவலா இந்தியாவுக்கு கிளம்பின தினமின்று – ஜூலை 8

0
134

வாஸ்கோ ட காமா ஷிப் ட்ராவலா இந்தியாவுக்கு கிளம்பின தினமின்று – ஜூலை 8

வாஸ்கோட காமா முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீர் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த நீர் வழிப் பாதையை கண்டுபிடிக்க வாஸ்கோட காமாவின் தந்தையான எஸ்டேவோ தான் இரண்டாம் ஜோவோ மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த இலட்சியத்தை அடையும் முன்னரே இறந்து போனார். இதையடுத்து இந்த வாய்ப்பு வாஸ்கோட காமாவின் அண்ணனான பௌலோவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அந்த பயணம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டியதாகி விட்டது. எனவே வேறு வழியில்லாமல் கடைசி முயற்சியாக வாஸ்கோட காமாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1469 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் பிறந்த வாஸ்கோட காமா, நன்கு கல்வி கற்று, இரண்டாம் ஜோவோ மன்னரின் அரசவையில் பணியாற்றினார். அவர் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 1492ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகளுக்கு எதிராக கினியா கடற்கரையில் போர்ச்சுகீஸ் படையை வழிநடத்தினார். இதையடுத்து அவர் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா நோக்கிய பயணத்திற்கு தலைமையேற்று வழி நடத்த நியமிக்கப்பட்டார். 1497 ஆம் ஆண்டு இதே ஜூலை 8 ஆம் தேதிதான் அவர் தனது பயணத்தைத் துவங்கினார்.

இவருடன் நான்கு கப்பல்கள் வந்தன. ஸோ கேப்ரியல் (Sao Gabriel) என்ற கப்பலுக்கு கோன்காலோ அல்வேர்ஸ் (Goncalo Alvares) என்பவர் தலைமேற்று வழிநடத்தினார். வாஸ்கோட்ல்ககாமாவின் சகோதரர் பௌலோ (Paulo) ஸோ ரெபெல் (Sao Rafael) என்ற கப்பலை வழிநடத்தினார். மற்ற இரண்டு கப்பல்கள் பெர்ரியோ (Berrio) மற்றும் ஸ்டார்ஷிப் (Starship) ஆகும். இந்த கப்பல்களில் வேலை பார்த்தவர்கள் பெரும்பாலும் கைதிகள் ஆவார்கள்