`வாழும் கற்கள்’ ‘ அதிக செம்மையான பயிர்களை உருவாக்க முடியும்

0

`வாழும் கற்கள்’ ‘ அதிக செம்மையான பயிர்களை உருவாக்க முடியும்

கற்குமிழிகள் `வாழும் கற்கள்’ என்று கருதப் படுகின்றன. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒரு கற்குமிழியைப் பார்க்க வேண்டும்: அவை வாழும் இனமாக இருப்பதைக் காட்டிலும் கூழாங்கற்களைப் போல தோற்றமளிக்கும்.

ஆனால் தெற்கு ஆப்பிரிகாவைச் சேர்ந்த நம்ப முடியாத இந்த உயிரினம் உண்மையிலேயே அங்கீகரிக்கப்படாத தாவர இனமாக உள்ளது. அதிக செம்மையான தாவரங்களை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.

மிக மோசமான வறட்சி சூழ்நிலைகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இந்தத் தாவரங்கள் உள்ளன. கற்களைப் போன்ற தோற்றத்தால், பிற உயிரினங்களுக்கு உணவாகாமல் தப்பிவிடுகிறது.

பெரும்பாலும் நிலத்துக்கு அடியில் வளரக் கூடியவை என்றாலும், ஒளி ஊடுருவக் கூடிய மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் சூரிய ஒளி உள்ளே செல்கிறது – அது சக்தியாக மாற்றப் படுகிறது.

பூமிப் பரப்புக்கு மேலே உள்ள பிரகாசமான ஒளி மற்றும் பூமிப் பரப்புக்கு கீழே உள்ள குறைந்த ஒளி என இரண்டு சூழ்நிலையையும் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் கற்குமிழிகளின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் செம்மையான தாவரங்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.