“வருமானவரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது!” – மு.க.ஸ்டாலின்

0
204

“வருமானவரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது!” – மு.க.ஸ்டாலின்

வருமானவரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுர இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிரதமர் ஆக எது வேண்டுமானாலும் நடக்கும் என்றார். நியமாக பார்த்தால் தேனி நாடாளுமன்றத் தேர்தலை தான் நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் கோடி கோடியாய் பணத்தை கொடுத்தாலும், மத்திய மாநில அரசை அப்புறப்படுத்த மக்கள் உறுதி கொண்டிருப்பதாக கூறினார்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் கோடி கோடியாய் பணத்தை கூட்டினாலும் ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தாலும் மக்கள் மாநில அரசையும் மத்திய அரசையும் அப்புறப்படுத்துவதற்கு உறுதி கொண்டிருக்கின்றனர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலத்தில் தேர்தல் ஆணையத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன எனவும் ஸ்டாலின் கூறினார்.