வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0
13

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 9 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, பேட்டரி கார் மூலம் சென்று சிங்கங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.