ரேஷன் கடையில் கள ஆய்வு – மக்கள் நீதி மய்யம்

0
213

ரேஷன் கடையில் கள ஆய்வு – மக்கள் நீதி மய்யம்

திருச்சி மண்ணச்சநல்லூர், S.புதூர்; பூசாரிகொட்டம் கிராமத்திலுள்ள ரேசன் கடையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் Siva Elango,மாநில இணைச் செயலாளர் Jai Ganesh, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் Dr.கோகுல் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தலைமையிலான குழு கள ஆய்வு (Social Audit) செய்தது. வாரத்தில் ஒருநாள் மட்டுமே செயல்படும் இக்கடையானது குறைந்தபட்சம் 2 நாட்களாவது செயல்படவேண்டும், முறையாக எடை போடப்படவேண்டும், அனைத்துப் பொருட்களும் ஒரே நாளில் வழங்கப்படவேண்டும், தேவையில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள், அவரவர் பகுதியிலுள்ள ரேசன் கடையில் கள ஆய்வு செய்து மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.