ரூ.800 கோடிக்கு மேல் மதிப்புள்ள கையகப்படுத்தப்பட்ட 500-க்கும் கூடுதலான சொத்துக்களை மின்னணு ஏலம் விட ஐ.ஓ.பி. முடிவு

0

ரூ.800 கோடிக்கு மேல் மதிப்புள்ள கையகப்படுத்தப்பட்ட 500-க்கும் கூடுதலான சொத்துக்களை மின்னணு ஏலம் விட ஐ.ஓ.பி. முடிவு

சென்னை, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தான் கையகப்படுத்திய ரூ.800 கோடிக்கும் மேல் மதிப்புள்ள, 500க்கும் கூடுதலான சொத்துக்களை, மின்னணு ஏலம் விட புகழ்பெற்ற சொத்து தளமான மேஜிக்பிரிக்ஸ்-வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  மெகா மின்னணு ஏலம் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 21 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறும்.

சென்னை, கோவை, மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைக் கொண்ட ஏழு மையங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன.  500-க்கும் மேற்பட்ட சொத்துக்களில், பெரும்பாலானவை சென்னை மற்றும் கோவையில் உள்ளன. மற்றவை, மும்பை, புனே, நாக்பூர், கொல்கத்தா, ராஞ்சி, மீரட், லக்னோ, லூதியானா, ஹைதராபாத், போபால் போன்ற 12 முக்கிய நகரங்களில் உள்ளன.

சொத்துக்களை வாங்க விரும்புபவர்கள், auctions.magicbricks.com/bank/event/IOB-ஐ லாக் செய்து, மின்னணு ஏலத்திற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மனை வணிகத் தொழில் துறையில் ஆன்லைன் தளங்கள், முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் திரு. கே.சுவாமிநாதன் கூறியுள்ளார்.  டிஜிட்டல் முறையின் மூலம், சொத்துக்களை வாங்குவது மிக எளிமையாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேஜிக்பிரிக்ஸ்-வுடனான இந்த மெகா ஏலத்தின் வெற்றியை எதிர்நோக்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக மின்னணு ஏல முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மேஜிக்பிரிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. சுதிர் பை கூறியுள்ளார். இந்த முறையின் மூலம் வங்கிகள் கையகப்படுத்திய 1,300-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.