ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

0

*ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது*

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.16 லட்சத்தில் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் கடப்பா பக்தர் நேற்று இரவு காணிக்கையாக அளித்தார். இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் காணிக்கையாக வழங்கினர். பின்னர் அவர்கள் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

இந்த பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரத்தை தயாரிக்க ஒரு கிலோ தங்கம், வெள்ளி உபயோகப்படுத்தினோம். இதில் நடமாடும் வேன் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வேனில் இருந்த தறி மூலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள் உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என அந்த அங்கவஸ்திரத்தில் எழுத்தை நெய்தனர். அதன்பின்னர் தற்போது இவை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.