ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்; இம்முறை தூத்துக்குடியில்!

0

ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்; இம்முறை தூத்துக்குடியில்!

தூத்துக்குடி: மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து, ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இணையதளம் தொடங்கினார்.

அதன்மூலம் தனது கட்சிக்கு காவலர்களை சேர்த்து வருகிறார். தனக்கு நம்பிக்கையுள்ள சிலரால் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இவர்கள் 32 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர்.

மொத்தம் 60 மாவட்டங்களாக ரஜினி பிரித்துள்ளார். அதன்மூலம் ஒன்றரை கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்நிலையில் வேலூர், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.