யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0
52

யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? எனவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளசாராயம் தயாரிப்பது போன்றவையெல்லாம் கற்றுக் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவர்கள் எப்படி இதையெல்லாம் செய்கிறார்கள்? அவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும், ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? வெளி மாநிலங்களிலிருந்து இது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனில் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? என்ற கேள்வியையும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையின் போது இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.