மே 5 பிளஸ்-2 தேர்வு ஆரம்பம்: 10ம் வகுப்பு தேர்வு மே 6-ந்தேதி தொடக்கம்

0
57

மே 5 பிளஸ்-2 தேர்வு ஆரம்பம்: 10ம் வகுப்பு தேர்வு மே 6-ந்தேதி தொடக்கம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும்.

பிளஸ்-1-க்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 2-ந் தேதி முடிவடையும். 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறும். 10, 11, 12 ஆகிய வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2 -ந்தேதி வரை நடைபெறும்.

பிளஸ்-2 செய்முறை தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதி வெளியிடப்படும். பிளஸ்-1-க்கு ஜூலை 7-ந்தேதி முடிவுகள் வெளியாகும். 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந் தேதி அறிவிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி, மே 28-ந் தேதி வரை நடைபெறும். பிளஸ்-1 தேர்வு மே 9-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 31 வரை நடைபெறும். 10-ம் வகுப்புக்கான தேர்வு மே 6-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 30 வரை நடைபெறும்.

எந்தெந்த தேதியில் என்னென்ன பரீட்சை என்பதை tnschools.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்களுடைய பார்வைக்கு வெளியிடப்படும். அது மட்டுமின்றி tge.tn.gov.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்றார்.