முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

0
91

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி, கடந்த 22 நாட்களாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை காலமானார். பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

ராஜாஜி மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜத் முகர்ஜிக்கு பிரதமர் ஆறுதல் கூறினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.