முன்னாள் காதலியுடன் நிர்வாண போஸ்…. போட்டோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்

0

முன்னாள் காதலியுடன் நிர்வாண போஸ்…. போட்டோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்

தமிழில் அலெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து விவாகரத்து செய்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மகள் வயது பெண்ணை மணப்பதா? என்று விமர்சனங்கள் கிளம்பின. மிலிந்த் சோமன் 25 வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மதுசாப்ரேவுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருந்தார். அதில் இருவரும் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தனர். மிலிந்த் சோமன் கழுத்தில் ஒரு மலைப்பாம்பையும் போட்டு இருந்தார். இந்த விளம்பர படத்துக்கு எதிராக அப்போதே மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மிலிந்த் சோமனின் டுவிட்டர் பதிவு

தற்போது அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் மிலிந்த் சோமன் வெளியிட்டு, “இது 25 வருடம் பழமையான படம். அப்போது சமூக வலைத்தளங்கள், இணையதளம் கிடையாது. இப்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டால் என்ன எதிர்வினைகள் வரும் என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மிலிந்த் சோமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சிலர் தயாராகி வருகிறார்கள்.