முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான திடீர் சந்திப்பு ஏன்? ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா பேட்டி

0
85

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான திடீர் சந்திப்பு ஏன்? ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா பேட்டி

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அவசரம் தேவையை கருதி நேரில் வந்து முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தோம். கொரோனா காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். முதல்-அமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கொரோனா பாதிப்பால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். இரு மாநில தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினோம். பிரச்சினைகளை கேட்டறிந்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

முன்னதாக ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் எம்.எல்.ஏ ரோஜா.