முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை அப்போலோ அட்மிட் முதல் இன்று வரை!

0

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை அப்போலோ அட்மிட் முதல் இன்று வரை!

கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதையடுத்து ஜெ. உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு இதயத்துடிப்பில் சிக்கல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஜெ. உடல்நிலை தொடர்பாக இதுவரை நிகழந்தது என்ன?.

22 செப்’16- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெ. அனுமதி

23 செப்’16- ஜெ. உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ முதல் அறிக்கை

24 செப்’16 – ஜெ. சாதாரண உணவுகளை உட்கொள்வதாக சொன்னது அப்போலோ 25 செப்’16 – ஜெ. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்று தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் அப்போலோ கேட்டுக் கொண்டது.

29 செப்’16- முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்றது அப்போலோ.

2 அக்’16 – லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல் அப்போலோ வருகை தந்து மருத்துவர்களுடன் ஜெ. சிகிச்சை குறித்து ஆலோசனை.

3 அக்’16- முதல்வருக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, நோய்க்கொல்லி மருந்துகள் தரப்பட்டது , சுவாசக்கருவிகள் பொருத்தம்.

4 அக்’16- முதல்வரின் உடல்நிலை முன்னேறி வருகிறது, அவருக்குத் தரப்படும் சிகிச்சை தொடரப்படுகிறது எனத் தகவல்.

6 அக்’16 – எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் அனைவரும் அப்போலோ மருத்துவர்களுடன் முதல்வர் சிகிச்சை குறித்து கலந்தாலோசனை. விண்டர் பிராங்கைடிஸ் மற்றும் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்

8 அக்’16- ஜெ. நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

10 அக்’16 – பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் அப்போலோ வருகை.

21 அக்’16- தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் தலைமையில் இதயநோய்,நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.

நவம்பர் 19-ந் தேதி:- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

டிசம்பர் 3-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.

4 டிச’16- முதல்வருக்கு மாலையில் திடீர் இதயதுடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ திடீர் அறிக்கை.

5 டிச’16- முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சைஅறுவை சிகிச்சை முடிந்தது.