மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியை பாராட்டுகிறேன்’ – கமல்ஹாசன்

0
53

மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியை பாராட்டுகிறேன்’ – கமல்ஹாசன்

சென்னை, பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாகிறார்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால்.

கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.