மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் அஜித் – வீடியோ

0

மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் அஜித் – வீடியோ

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கின்போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்தபோது, அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களான குஷி கபூர், ஜான்வி கபூர் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பின்றி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.